ராணி எலிசபெத் மறைவு: இந்தியாவில் நாளை மறுநாள் துக்கம் அனுசரிப்பு


ராணி எலிசபெத் மறைவு: இந்தியாவில் நாளை மறுநாள் துக்கம் அனுசரிப்பு
x

கோப்புப்படம்

தினத்தந்தி 9 Sept 2022 2:32 PM IST (Updated: 9 Sept 2022 2:55 PM IST)
t-max-icont-min-icon

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவிற்கு மரியாதை செலுத்தும் வகையில் நாளை மறுநாள் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

இங்கிலாந்து ராணியாக 70 ஆண்டு காலம் பதவி வகித்தவர் இரண்டாம் எலிசபெத். முதுமை தொடர்பான உடல்நலக்கோளாறுகளால் அவதிப்பட்டு வந்த அவர், ஊன்றுகோல் உதவியுடனே நடமாடினார்.

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, மகாராணியின் அதிகாரப்பூர்வ மருத்துவக்குழுவினர் மகாராணி எலிசபெத்துக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மகாராணி எலிசபெத் நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 96 ஆகும். இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவிற்கு மரியாதை செலுத்தும் வகையில் நாளை மறுநாள் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு நாளை மறுநாள் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.


Next Story