இரண்டாவது காலாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதம்


இரண்டாவது காலாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதம்
x

இந்தியாவில் நடப்பு 2022-23 நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்) பொருளாதார வளர்ச்சி ( மொத்த உள்நாட்டு உற்பத்தி) 6.3 சதவீதம் ஆக பதிவாகி இருக்கிறது.

புதுடெல்லி,

இந்தியாவில் நடப்பு 2022-23 நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்) பொருளாதார வளர்ச்சி ( மொத்த உள்நாட்டு உற்பத்தி) 6.3 சதவீதம் ஆக பதிவாகி இருக்கிறது.2021-22 நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.4 சதவீதமாக இருந்தது.

இந்த தகவலை தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்.எஸ்.ஓ.) தெரிவித்துள்ளது.பொருளாதார தர நிர்ணய நிறுவனமான இக்ரா, ஜூலை-செப்டம்பர் 2022 காலாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என்றும், பாரத ஸ்டேட் வங்கி 5.8 சதவீதமாக இருக்கும் என்றும் கணித்திருந்தன.சீனாவில் நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 3.9 சதவீதமாக பதிவாகி உள்ளது.


Next Story