பஞ்சாப்: அமிர்தசரஸ் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் டிரோன் கண்டுபிடிப்பு

Image Courtesy : ANI
அமிர்தசரஸ் அருகே பாகிஸ்தானைச் சேர்ந்த டிரோனை எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் கைப்பற்றினர்.
சண்டிகர்,
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இன்று காலை சந்தேகத்திற்குரிய வகையில் டிரோன் ஒன்று பறந்ததை எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் கவனித்தனர். இதையடுத்து அந்த டிரோன், எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பல்ஹர்வால் என்ற கிராமத்தில் உள்ள ஒரு வயல்வெளியில் விழுந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதை கைப்பற்றி அதிகாரிகள் ஆய்வு செய்த நிலையில், அந்த டிரோன் சீனாவில் தயாரிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும் பாகிஸ்தானில் இருந்து அந்த டிரோன் அனுப்பப்பட்டிருப்பதாகவும், தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story