பஞ்சாப்: சுட்டுக்கொல்லப்பட்ட சித்து மூஸ்வாலா குடும்பத்தினருடன் முதல்-மந்திாி சந்திப்பு


பஞ்சாப்: சுட்டுக்கொல்லப்பட்ட சித்து மூஸ்வாலா குடும்பத்தினருடன் முதல்-மந்திாி சந்திப்பு
x

பஞ்சாப்பில் சுட்டுக்கொல்லப்பட்ட சித்து மூஸ்வாலாவின் குடும்பத்தினரை முதல்-மந்திாி பகவந்த் மன் சந்தித்து ஆறுதல் தொிவித்தாா்.

பஞ்சாப்,

பஞ்சாபி பாடகரும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான சித்து மூஸ்வாலா, அங்குள்ள மன்சா மாவட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார்.கனடாவைச் சேர்ந்த கூலிப்படைத் தலைவர் கோல்டி பிரார், இந்த கொலைச் சம்பவத்துக்கு பொறுப்பேற்றாா். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், பஞ்சாப் முதல்-மந்திாி பகவந்த் மன், சித்து மூஸ்வாலாவின் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தொிவித்தாா். இதற்கு உள்ளுா் மக்கள் எதிா்ப்பு தொிவித்தாக கூறப்படுகிறது.

முன்னதாக, சித்து மூஸ்வாலாவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தொிவிக்க ஆம் ஆத்மி எம்எல்ஏ குர்பிரீத் சிங் பனாவாலி அங்கு வந்தாா். அவரை வீட்டிற்கு நுழைய விடாமல் உள்ளுா்மக்கள் போராட்டம் நடத்தினா். ஆம்ஆத்மி கட்சி தான் சித்து மூஸ்வாலாவை கொன்றதாக கூறி அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசாா் போராட்டகாரா்களை அப்புறப்படுத்தனா்.

பஞ்சாப் முதல்-மந்திாி பகவந்த மன்னுக்கு எதிராக உள்ளுா் மக்கள் போராட்டம் நடத்தவில்லை எனவும், காங்கிரஸ் கட்சி தொண்டா்களால் திட்டமிட்டு போராட்டம் நடத்தியதாக ஆம்ஆத்மி கட்சி குற்றம் சாட்டி உள்ளது.


Next Story