பஞ்சாப்: பொற்கோயிலில் தாக்குதல் நடத்திய தினத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் முற்றுகை போராட்டம்!


பஞ்சாப்: பொற்கோயிலில் தாக்குதல் நடத்திய தினத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் முற்றுகை போராட்டம்!
x

பொற்கோயிலில் மேற்கொள்ளப்பட்ட 'ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார்' ராணுவ நடவடிக்கையின் 38வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அமிர்தசரஸ்,

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள பொற்கோயில் சீக்கியர்களின் முக்கிய வழிபாட்டு தலமாக உள்ளது. பொற்கோயிலில் மேற்கொள்ளப்பட்ட 'ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார்' ராணுவ நடவடிக்கையின் 38வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1984-ம் ஆண்டு பொற்கோவிலிலுக்குள் பதுங்கி இருந்த காலிஸ்தான் பயங்கரவாதிகளை அப்புறப்படுத்த அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ராணுவத்துக்கு உத்தரவிட்டார். இதையடுத்து 'ஆபரேசன் புளூ ஸ்டார்' என்ற பெயரில் ராணுவம் பொற்கோவிலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. இதில் பயங்கரவாதிகள் மற்றும் பொதுமக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

பொற்கோவிலில் ராணுவ நடவடிக்கையின் 38-வது ஆண்டு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் பொற்கோவிலில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பொற்கோவில் நுழைவு வாயிலில் வாள்களை ஏந்தி முற்றுகையிட்டு காலிஸ்தான் ஆதரவாளர்கள் முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு நிலவியது. இதையடுத்து நிகழ்விடத்திற்கு வந்த பாதுகாப்புப் படையினர் அவர்களை வெளியேற்றினர். அசம்பாவிதங்களை தடுக்க பொற்கோவிலை சுற்றி கண்காணிப்பு பணியில் சிறிய வகை டிரோன்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.


Next Story