ஒரு மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட இரண்டு தோழிகள்


ஒரு மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட இரண்டு தோழிகள்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 14 Sept 2022 5:07 PM IST (Updated: 14 Sept 2022 5:16 PM IST)
t-max-icont-min-icon

புனேவில் ஒரு மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து சிறுவயது தோழிகள் இருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

புனே,

மராட்டிய மாநிலம் புனேவில் ஒரே குடியிருப்பில் வசித்த 19 வயதாகும் சிறுவயது தோழிகள் இருவர் ஒரு மணி நேரத்தில் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. ஹடாப்சர் நகரில் நேற்று மாலை இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அரவிந்த் கோகுலே கூறும்போது, ஹடாப்சரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் வசிக்கும் 19 வயதாகும் பெண் ஒருவர், நேற்று மாலை 6:30 மணியளவில் அவருடைய வீட்டின் படுக்கையறையில் இறந்து கிடந்தார். அவரது உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் ஒரு மணி நேரம் கழித்து இரவு 7:30 மணியளவில் உயிரிழந்த பெண்ணின் சிறுவயது தோழி அந்த 4 மாடி குடியிருப்பு கட்டிடத்தின் மொட்டை மாடியில் இருந்து குதித்து உயிரிழந்தார். தோழிகளில் ஒருவர் வணிகவியல் மாணவி, மற்றொருவர் அனிமேஷன் படிப்பை மேற்கொண்டு வருகிறார்.

தற்கொலை குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை. மேலும் அவர்களின் தற்கொலைக்கான காரணமும் இதுவரை தெரியவில்லை என்று கூறினார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.


Next Story