மத நிகழ்ச்சியில் கல் வீசிய நபர்களை ஊர் நடுவே மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்த போலீசார் - அதிர்ச்சி சம்பவம்


மத நிகழ்ச்சியில் கல் வீசிய நபர்களை ஊர் நடுவே மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்த போலீசார் - அதிர்ச்சி சம்பவம்
x

மின்கம்பத்தில் போலீசார் கட்டி வைத்து அடிக்க சுற்றி இருந்தவர்கள் அதை கண்டு ஆரவாரமடைந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

காந்திநகர்,

இந்து மத பண்டியான நவராத்திரி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. நவராத்திரி பண்டிகையின் போது கர்பா என்ற நடனம் வட இந்தியாவில் பிரபலமாகும். நவராத்திரி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கர்பா நடனம் ஆடப்படுகிறது. இதனிடையே, கர்பா நடனத்தின் போது சில இடங்களில் அசம்பாவித சம்பவங்களும் அரங்கேறியது.

இந்நிலையில், குஜராத் மாநிலம் ஹிடா மாவட்டம் உன்ட்ஹிலா கிராமத்தில் கர்பா நிகழ்ச்சி கடந்த திங்கட்கிழமை இரவு நடைபெற்றது. இந்து மத வழிபாட்டு தலமான துல்ஜா பவானி அம்மன் கோவிலில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த கோவில் அருகே இஸ்லாமிய மத பள்ளியான மதராசா உள்ளது. இதனால், அப்பகுதியில் கர்பா நிகழ்ச்சிக்கு அக்கிராமத்தை சேர்ந்த இஸ்லாமிய மதத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆனால், கர்பா நிகழ்ச்சி நடைபெற்றபோது அந்த கிராமத்தை சேர்ந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கும்பலாக வந்து நிகழ்ச்சிக்கு இடையூறு செய்துள்ளனர்.

கற்கல் உள்ளிட்டவற்றை வீசி கர்பா நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால், இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

பின்னர் தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். இது குறித்து தகவலறிந்த போலீசார், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் நிலைமையை கட்டுக்கொள் கொண்டு வந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், பெண்கள் உள்பட 150 பேர் கொண்ட கும்பல் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாகவும் அதில் 43 பேர் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய 10 பேரை செவ்வாய்க்கிழமை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 10 பேரையும் கல்வீச்சு சம்பவம் நடைபெற்ற பகுதியான கிராமத்தில் மையப்பகுதிக்கு அழைத்து வந்துள்ளனர்.

அங்கு ஒரு மின் கம்பத்தில் கட்டி வைத்து 10 பேரையும் போலீசார் கடுமையாக தாக்கினர். கைது செய்யப்பட்ட ஒவ்வொருவரையும், அழைத்து மின்கம்பத்தில் கட்டிவைத்து போலீசார் தாக்க அதை அங்கு சுற்றி இருந்தவர்கள் வேடிக்கை பார்த்து ஆரவாரமடைந்த கொடூர சம்பவமும் அரங்கேறியது.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்க உள்ளூர் போலீசாருக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.




Next Story