'தெலங்கானா முதல்-மந்திரியின் ரிமோட் கண்ட்ரோல் பிரதமர் நரேந்திர மோடியிடம் உள்ளது' - ராகுல் காந்தி விமர்சனம்


தெலங்கானா முதல்-மந்திரியின் ரிமோட் கண்ட்ரோல் பிரதமர் நரேந்திர மோடியிடம் உள்ளது - ராகுல் காந்தி விமர்சனம்
x

பாரத ராஷ்டிர சமிதி கட்சி பா.ஜ.க.வின் துணை அணி போல செயல்பாடு வந்துள்ளது என்று ராகுல் காந்தி விமர்சித்தார்.

ஐதராபாத்,

தெலங்கானா மாநிலம் கம்மம் பகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தெலங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். தொடர்ந்து இந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது;-

"நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எப்போதும் பா.ஜ.க.விற்கு எதிராக குரல் எழுப்பியுள்ளது. ஆனால் சந்திரசேகர ராவின் பாரத ராஷ்டிர சமிதி கட்சி பா.ஜ.க.வின் துணை அணி போல செயல்பாடு வந்துள்ளது. சந்திரசேகர ராவ் தன்னை ஒரு ராஜா என்றும், தெலங்கானா தனது ராஜ்ஜியம் என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால் தெலங்கானா முதல்-மந்திரியின் ரிமோட் கண்ட்ரோல் பிரதமர் நரேந்திர மோடியிடம் உள்ளது. அண்மையில் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் ஊழல் நிறைந்த, ஏழைகளுக்கு எதிரான ஒரு கட்சியை ஏழைகள், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் துணையோடு தோற்கடித்தோம். அதே போன்ற சம்பவம் தெலங்கானாவிலும் நடக்கப் போகிறது" என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.


Next Story