பெண்கள் அதிகாரம் பெற்றால் நாடு வலிமை பெறும் - பிரதமர் மோடி
அன்றாட தேவைகளுக்காக போராடும் மக்களை அதில் இருந்து வெளியேற்ற விரும்புகிறோம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
'விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா' திட்ட பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொளியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
" விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா திட்டத்தில் 2 கோடிக்கும் அதிகமான ஏழைகளின் உடல் நிலை பரிசோதிக்கப்பட்டது. அதே காலகட்டத்தில் 1 கோடி பேருக்கு காசநோய் பரிசோதனை செய்யப்பட்டது. 22 லட்சம் பேர் அனீமியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஏழை, தலித், பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடி சமூகங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
அன்றாட தேவைகளுக்காக போராடும் மக்கள் அதில் இருந்து மீள விரும்புகிறோம். ஏழைகள், பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள் என அனைவரும் அதிகாரம் பெறும்போது நாடு வலிமை பெறும். தற்போதைய காலகட்டத்தில் பெண்களே முன் வந்து புதிய சாதனைகளை படைத்து வருகின்றனர் " என்றார்.
Related Tags :
Next Story