டெல்லியில் டி.ஜி.பி.க்கள் மாநாடு பிரதமர் மோடி இன்று பங்கேற்கிறார்

2022-ம் ஆண்டுக்கான மாநாடு டெல்லியில் உள்ள தேசிய வேளாண் அறிவியல் வளாகத்தில் நேற்று தொடங்கியது.
புதுடெல்லி
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல்துறை தலைவர்கள் மற்றும் மத்திய காவல் படை தலைவர்களின் ஆண்டு மாநாட்டை நடத்துவதில் கடந்த 2014- ம் ஆண்டு முதல் பிரதமர் மோடி தீவிரம் காட்டி வருகிறார்.
இதன்படி 2022-ம் ஆண்டுக்கான மாநாடு டெல்லியில் உள்ள தேசிய வேளாண் அறிவியல் வளாகத்தில் நேற்று தொடங்கியது. இந்த மாநாடு 3 நாள் நடக்கிறது. இதில் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
இந்த மாநாட்டில் காவல்துறை மற்றும் சிறைத்துறை சீர்திருத்தங்கள், சைபர் கிரைம் தொழில் நுட்பங்கள், பயங்கரவாத தடுப்பு சவால்கள் உள்ளிட்ட பல்வேறுவிஷயங்கள் விவாதிக்கப்படுகிறது.
Related Tags :
Next Story