ஆசிய கோப்பை டேபிள் டென்னிசில் முதல் முறையாக பதக்கம் வென்ற மணிகா பத்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.


ஆசிய கோப்பை டேபிள் டென்னிசில் முதல் முறையாக பதக்கம் வென்ற மணிகா பத்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
x

ஆசிய கோப்பை டேபிள் டென்னிசில் முதல் முறையாக பதக்கம் வென்ற மணிகா பத்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

புதுடெல்லி,

ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டிகள் தாய்லாந்து நாட்டின் பாங்காங் நகரில் நடைபெற்றது. இத்தொடரில் முதல்முறையாக அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறிய இந்திய நட்சத்திர வீராங்கனை மணிகா பத்ரா, தர வரிசையில் இரண்டாம் நிலையில் உள்ள ஜப்பான் வீராங்கனை மீமா இட்டோவை எதிர்கொண்டார்.

இதில் 2-4 (8-11, 11-7, 7-11, 6-11, 11-8, 7-11) என்ற செட் கணக்கில் மணிகா தோல்வியடைந்தார். இதையடுத்து நேற்று நடந்த வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் உலகின் ஆறாவது நிலை வீராங்கனையான ஹினா ஹயாட்டாவை, மணிகா பத்ரா சந்தித்தார். இதில் 4-2 (11-6, 6-11, 11-7, 12-10, 4-11, 11-2) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற மணிகா, இந்த தொடரில் முதன்முறையாக பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை என்ற அபார சாதனையைப் படைத்தார்.

மேலும், 10,000 அமெரிக்க டாலர் பரிசும் அவருக்கு கிடைத்துள்ளது. இந்நிலையில், ஆசிய கோப்பை டேபிள் டென்னிசில் முதல் முறையாக பதக்கம் வென்ற மணிகா பத்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், வெண்கலம் வென்று ஆசிய கோப்பையில் இந்திய டேபிள் டென்னிஸ் வரலாற்றை எழுதியதற்காக மணிகா பத்ராவை வாழ்த்துகிறேன். அவரது வெற்றி இந்தியா முழுவதும் உள்ள பல விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் மற்றும் டேபிள் டென்னிஸை இன்னும் பிரபலமாக்கும் என பதிவிட்டுள்ளார்.


Next Story