காமல்வெல்த் போட்டியில் வெள்ளி வென்ற பிந்த்யாராணி தேவிக்கு பிரதமர் மோடி வாழ்த்து


காமல்வெல்த் போட்டியில் வெள்ளி வென்ற பிந்த்யாராணி தேவிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
x

காமல்வெல்த் போட்டியில் பளுதூக்குதலில் 55 கிலோ எடைப்பிரிவில் பிந்த்யாராணி தேவி வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

புதுடெல்லி,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தொடக்க விழா நேற்று முன் தினம் முடிவடைந்த நிலையில் இரண்டாம் நாளான நேற்று பல்வேறு விளையாட்டு போட்டிகள் தொடங்கி நடைபெற்றன.

இந்த நிலையில், மகளிர் பிரிவில் பளுதூக்குதலில் 55 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் பிந்த்யாராணி தேவி பங்கேற்றார் .இதில் 202 கிலோ எடையை தூக்கி இரண்டாம் இடம் பிடித்த பிந்த்யாராணி தேவி வெள்ளி பதக்கம் வென்றார்.

இந்நிலையில் காமல்வெல்த் போட்டியில் வெள்ளி வென்ற பிந்த்யாராணி தேவிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "பர்மிங்காம் காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக பிந்த்யாராணி தேவிக்கு வாழ்த்துகள். இந்த சாதனை அவரது விடாமுயற்சியின் வெளிப்பாடாகும், மேலும் இது ஒவ்வொரு இந்தியரையும் மிகவும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது. அவருடைய எதிர்கால முயற்சிகளுக்கு எனது வாழ்த்துக்கள்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story