அயோத்தி ராமர் கோவில் விவகாரம்: சர்ச்சையை கிளப்பிய சுப்பிரமணியன் சுவாமி
ராமர் கோவிலை விட்டு விட்டு பிரதமர் மோடி தனது தொகுதியான வாரணாசியில் கவனம் செலுத்த வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
பாஜகவின் மூத்த தலைவராக இருப்பவர் சுப்பிரமணியன் சுவாமி. இவர் அவ்வப்போது பாஜகவிற்கு எதிராக சில கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். இது அவ்வப்போது வைரலாகும் அந்த வகையில், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலுக்கும் பிரதமர் மோடிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அவர் கூறியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.
அயோத்தி ராமர் கோவிலில் சிலைப் பிரதிஷ்டையை மத்திய அரசு கோலாகலமாக நடத்த பல்வேறு ஏற்பாடுகளை செய்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கும் அயோத்தி ராமர் கோவிலுக்கும் எந்ததொடர்பும் இல்லை என்று கருத்துக் கூறி பரபரப்பை ஏற்றி விட்டு இருக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது,
அயோத்தியில் ராமர் கோவிலை அவர்தான் கட்டியதுபோல பிரதமர் மோடி காட்டிக் கொள்வதாகவும் உண்மையில் இதில் மோடியின் பங்கீடு ஜிரோதான் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதோடு நிற்காமல், பிரதமர் மோடி தனது தொகுதியான வாரணாசியில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், ஞானவாபி மசூதி இருக்கும் இடத்தில் ஜோதிர்லிங் காசி கோவில் கட்டுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.