ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை பெங்களூரு வருகை


ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை பெங்களூரு வருகை
x

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை பெங்களூரு வருகிறார்.

பெங்களூரு: 2 நாட்கள் சுற்றுப்பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை (திங்கட்கிழமை) பெங்களூரு வருகிறார். தனி விமானம் மூலம் பெங்களூரு வரும் அவர், ராஷ்டிரிய ராணுவ பள்ளி பவள விழாவில் கலந்துகொள்கிறார். அதன் பிறகு கவர்னர் மாளிகையில் தங்கும் அவர், நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) இஸ்கான் கோவில் சார்பில் கனகபுரா ரோட்டில் திருப்பதி கோவில் மாதிரியில் கட்டப்பட்டுள்ள கோவிலை திறந்து வைக்கிறார்.

ஜனாதிபதி வருகையை முன்னிட்டு அவர் பங்கேற்கும் விழாக்கள் மற்றும் பயணிக்கும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.


Next Story