திருவள்ளுவர், ஆதிசங்கரர் வழியில் மத்திய அரசு - ஜனாதிபதி திரவுபதி முர்மு


திருவள்ளுவர், ஆதிசங்கரர் வழியில் மத்திய அரசு - ஜனாதிபதி திரவுபதி  முர்மு
x
தினத்தந்தி 31 Jan 2023 11:01 AM IST (Updated: 31 Jan 2023 5:56 PM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது.

புதுடெல்லி,

2023ம் ஆண்டின் மத்திய நிதிநிலை அறிக்கை நாளை (பிப்.,1) தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் இரு அவைகளின் கூட்டுகூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார்.

இந்தியா மிகப்பெரிய விண்வெளி சக்தியாக உருவெடுத்துள்ளது. திருவள்ளுவர், ஆதிசங்கரர், குருநானக் ஆகியோரின் வழியில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி தேசத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளது என்றார்.

மேலும், இன்று தன்னம்பிக்கையில் உயர்ந்து நிற்கிறது இந்தியா, உலகமே இந்தியாவை எதிர்நோக்கி உள்ளது. உலகின் பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வுகளை இந்தியா வழங்கி வருகிறது. தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

கொரோனா பெருந்தொற்றை இந்தியா கையாண்ட விதத்தை உலகமே பாராட்டியது.இந்த நிலையான பலமான அரசு கொரொனா பொருந்தொற்றை சிறப்பாக கையாண்டது.

ஜிஎஸ்டி மற்றும் ஆயுஷ்மான் பாரத் ஆகியவை நமது நாட்டிற்கான வரப்பிரசாதங்கள் ஆகும். நாட்டின் எல்லையோர கிராமங்களுக்கு சிறந்த வசதிகளை வழங்க, அரசு துடிப்பான கிராமங்கள் திட்டத்தை தொடங்கியுள்ளது. தேசிய பாதுகாப்புக் கண்ணோட்டத்தில், கடந்த ஆண்டுகளில் எல்லைப் பகுதிகளில் வரலாறு காணாத உள்கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் வளர்ச்சி வேகம் நடைபெற்று வருகிறது.

பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளை கல்வி கற்க வைப்போம். பிரச்சாரத்தின் வெற்றியை இன்று காண்கிறோம். பெண்களின் ஆரோக்கியம் முன்பை விட மேம்பட்டுள்ளது. எந்தவொரு வேலையிலும், எந்த ஒரு துறையிலும் பெண்களுக்கு எவ்வித தடையும் இல்லை என்பதையும் அரசு உறுதி செய்துள்ளது என்று கூறினார்.

Live Updates

  • 31 Jan 2023 1:52 PM IST

    திருவள்ளுவர், ஆதிசங்கரர் வழியில் மத்திய அரசு - ஜனாதிபதி திரவுபதி முர்மு

    2023ம் ஆண்டின் மத்திய நிதிநிலை அறிக்கை நாளை (பிப்.,1) தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் இரு அவைகளின் கூட்டுகூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார்.

    இந்தியா மிகப்பெரிய விண்வெளி சக்தியாக உருவெடுத்துள்ளது. திருவள்ளுவர், ஆதிசங்கரர், குருநானக் ஆகியோரின் வழியில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி தேசத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளது என்றார்.

  • ஜனாதிபதி உரை: சோனியா காந்தி பங்கேற்பு
    31 Jan 2023 1:48 PM IST

    ஜனாதிபதி உரை: சோனியா காந்தி பங்கேற்பு

    2023ம் ஆண்டின் மத்திய நிதிநிலை அறிக்கை நாளை (பிப்.,1) தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் இரு அவைகளின் கூட்டுகூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார்.

    இந்தநிலையில், ஜனாதிபதி உரையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி பங்கேற்றார். ஜனாதிபதி உரையை உன்னிப்பாக  கேட்டுக்கொண்டு இருந்தார்.

  • ஜனாதிபதி உரை: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே பங்கேற்கவில்லை
    31 Jan 2023 1:43 PM IST

    ஜனாதிபதி உரை: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே பங்கேற்கவில்லை

    2023ம் ஆண்டின் மத்திய நிதிநிலை அறிக்கை நாளை (பிப்.,1) தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில், இன்று நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று உரையாற்றினார்.

    இந்தநிலையில், இந்திய ஒற்றுமை பயணத்தின் நிறைவு நிகழ்ச்சிக்காக ஸ்ரீநகருக்கு சென்றுள்ள காங்கிரஸ் கட்சியினர் பனிப்பொழிவால் டெல்லிக்கு திரும்ப முடியவில்லை என தெரிவித்திருக்கிறார்கள். இதனால் காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு தலைவரான மல்லிகார்ஜுனே கார்கே உள்ளிட்டோரும் ஜனாதிபதி உரை நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.

  • ஜனாதிபதி உரையை புறக்கணித்த ஆம் ஆத்மி, பாரதிய ராஷ்ட்ரிய சமிதி...!
    31 Jan 2023 1:41 PM IST

    ஜனாதிபதி உரையை புறக்கணித்த ஆம் ஆத்மி, பாரதிய ராஷ்ட்ரிய சமிதி...!

    2023ம் ஆண்டின் மத்திய நிதிநிலை அறிக்கை நாளை (பிப்.,1) தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில், இன்று நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று உரையாற்றினார்.

    திரவுபதி முர்மு நாட்டின் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு நடக்கும் முதல் பட்ஜெட் கூட்டம் இதுவாகும். ஆனால் எதிர்க்கட்சிகளான ஆம் ஆத்மி மற்றும் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் பாரதிய ராஷ்ட்ரிய சமிதி ஜனாதிபதி உரையை புறக்கணித்திருக்கின்றன.

  • இந்தியாவின் உதவியை நாடும் உலக நாடுகள் - ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை
    31 Jan 2023 11:32 AM IST

    இந்தியாவின் உதவியை நாடும் உலக நாடுகள் - ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை

    நடப்பு ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கியது.

    நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில் திரவுபதி முர்மு உரையில் கூறியதாவது:-

    * சுதந்திரத்தின் 75-ம் ஆண்டு கொண்டாடப்படும் நிலையில் உரையாற்றுகிறேன்.

    * இந்தாண்டில் தன்னிறைவு பெற்ற நாடாக நாம் தொடர்ந்து வேகமாக முன்னேறி வருகிறோம்.

    * நாட்டின் இளைஞர்களும் பெண்களும் முன்னணியில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    * உலகின் அமைதிக்காக இந்தியா பாடுபட்டு வருகிறது.

    * உலகின் பார்வையில் இந்தியாவின் நிலை என்பது பெருமளவில் மாறி உள்ளது.

    * இந்தியா தனது பிரச்சினைகளை தீர்க்க பிறநாடுகளை சார்ந்திருக்காது.

    * மற்ற நாடுகள் தங்கள் பிரச்சினைகளை தீர்க்க இந்தியாவின் உதவியை எதிர்ப்பார்க்கின்றன.

    * 2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவை மிகச்சிறந்த நாடாக உருவாக்க நாம் பாடுபட வேண்டும்.

    * 2047-ம் ஆண்டுக்குள் பொன்னான அத்தியாங்களை கொண்ட ஒரு தேசத்தை கட்டி எழுப்ப வேண்டும்.

    * நாட்டிலிருந்து ஊழலை ஒழிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

    * கரீப் கல்யான் யோஜனா திட்டம் மூலம் கோடிக்கணக்கான ஏழை மக்கள் தடையற்ர உணவை பெறுகின்றனர்.

    * சட்டப்பிரிவு 370 நீக்கம், முத்தலாக் தடை சட்டம் உளிட்ட விஷயங்களில் அரசு தீர்க்கமாக முடிவு எடுக்கிறது.

    * நிலையான, அச்சமற்ற தீர்க்கமான அரசு பெரிய கனவுகளை நனவாக்கும் நோக்கில் செயல்படுகிறது.

    * வறுமை இல்லாத, நடுத்தர வர்க்கம் செழிப்பான இளைஞர்கள் முன்னணியில் நிற்கும் இந்தியாக இருக்க வேண்டும்.

    * இன்று தன்னம்பிக்கையில் உயர்ந்து நிற்கிறது இந்தியா, உலகமே இந்தியாவை எதிர்நோக்கி உள்ளது. ஏழை மக்கள் முன்னேற்றத்துக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாட்டின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரித்துள்ளது.

  • ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்
    31 Jan 2023 11:15 AM IST

    ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்

    புதுடெல்லி,

    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி முர்மு உரையாற்றி வருகிறார்.

    இரு அவைகளின் கூட்டு கூட்டம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை ஆற்றி வருகிறார்.

    கடந்த ஆண்டு ஜூலை மாதம் 25-ந் தேதி ஜனாதிபதி பதவி ஏற்றுக்கொண்ட பின்னர், நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி முர்மு உரை ஆற்றுவது இதுவே முதல் முறை ஆகும். பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் இது நடைபெறும் என்று சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.

    முதல் நாளில் பொருளாதார ஆய்வறிக்கையை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இந்த அறிக்கை 2022-23 முழு நிதி ஆண்டுக்கான இந்திய பொருளாதாரத்தின் நிலையையும், நிதி வளர்ச்சி, பண மேலாண்மை மற்றும் வெளித்துறைகள் உள்ளிட்ட எதிர்கால கண்ணோட்டத்தையும் மதிப்பாய்வு செய்கிறது. நாளை தனது 5-வது நிதி நிலை அறிக்கையை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

    2023 பட்ஜெட் கூட்டத்தொடரில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பங்கேற்றுள்ளனர். மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரை ஆம் ஆத்மி கட்சி புறக்கணித்துள்ளது.

    முன்னதாக நாடாளுமன்ற அவைக்கு வந்த ஜனாதிபதி திரவுபதி முர்முவை பிரதமர் மோடி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.


Next Story