ஆஸ்கர் விருது வென்ற ஆவணப்படத்தில் இடம்பெற்ற பொம்மன் - பெள்ளி தம்பதியுடன் ஜனாதிபதி திரவுபதி முர்மு சந்திப்பு
ஆஸ்கர் விருது வென்ற ஆவணப்படத்தில் இடம்பெற்ற பொம்மன் - பெள்ளி தம்பதியை ஜனாதிபதி திரவுபதி முர்மு சந்தித்து பாராட்டினார்.
டெல்லி ,
தமிழ்நாட்டின் முதுமலை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் யானை பராமரிப்பாளர்களாக பணியாற்றும் பொம்மன், பெள்ளி ஆகியோரை பற்றிய 'எலிபன்ட் விஸ்பரர்ஸ்' ஆவண குறும்படம் ஆஸ்கார் விருதை வென்றது.தாயை பிரிந்த குட்டி யானைகளை அவர்கள் எவ்வாறு பராமரித்து வளர்த்தார்கள் என்பதும் அவர்களுக்கும் குட்டி யானைக்கும் இருந்த பாசப்பிணைப்பு என்ன என்பதும் படத்தில் இடம்பெற்று இருந்தது.
இந்நிலையில்,பொம்மன்- பெள்ளி தம்பதியினரை ஜனாதிபதி திரவுபதி முர்மு டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் சந்தித்தார்.மேலும் யானை குட்டிகளை பராமரிப்பதற்காக தன் இன்னுயிரை அர்ப்பணித்த தம்பதியினரை பாராட்டி சான்றிதழ் வழங்கினார் .
இவர்களை இதற்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story