நான் நடிகர் சிவராஜ்குமாரின் தீவிர ரசிகன்
நான் நடிகர் சிவராஜ்குமாரின் தீவிர ரசிகன் என்று பிரதாப் சிம்ஹா எம்.பி. திடீர் பல்டியடித்துள்ளார்.
ராய்ச்சூர்:-
கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான சிவராஜ்குமார், நேற்று முன்தினம் வருணா தொகுதியில் போட்டியிடும் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவுக்கு ஆதரவாக, தனது மனைவி கீதாவுடன் பிரசாரம் செய்தார். இதற்கு மைசூரு-குடகு தொகுதி பா.ஜனதா எம்.பி. பிரதாப் சிம்ஹா கடும் அதிருப்தி தெரிவித்து இருந்தார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், மறைந்த நடிகர் புனித்ராஜ்குமார் பெயரில் மருத்துவமனையை கட்டி மந்திரி சோமண்ணா திறந்துவைத்தார். ஆனால் சித்தராமையாவுக்கு ஆதரவாக நடிகர் சிவராஜ்குமார் பிரசாரம் செய்வதாக கூறி மருத்துவமனை திறப்பு விழாவின் போது ராகவேந்திர ராஜ்குமார் மந்திரி சோமண்ணாவை புகழ்ந்துபேசிய வீடியோவையும், நடிகர் சிவராஜ்குமார், சித்தராமையாவுக்கு பிரசாரம் செய்த படத்தையும் பகிர்ந்து இருந்தார். இதற்கு நடிகர் சிவராஜ்குமார் ரசிகர்களும், ஆதரவாளர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இதற்கு நடிகர் சிவராஜ்குமார் நேற்று சிவமொக்காவில் பேட்டி அளித்த போது பதில் அளித்தார். அதாவது, சோமண்ணாவும், பிரதாப் சிம்ஹாவும் எனது நண்பர்கள். என்னை வேறு கட்சியின் பிரசாரத்திற்கு அழைக்கவில்லை. காங்கிரசார் அழைத்ததால் அக்கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதாக கூறியிருந்தார்.
இதைத்தொடர்ந்து பிரதாப் சிம்ஹா எம்.பி. நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், நான் நடிகர் சிவராஜ்குமாரின் தீவிர ரசிகன். டாக்டர் ராஜ்குமாரின் குடும்பத்தினர் மீது எனக்கும் மரியாதை உண்டு. அவரது குடும்பத்தை அரசியலுக்கு அப்பாற்பட்டு பார்க்கிேறாம். பிரசாரம் பற்றி நடிகர் சிவராஜ்குமார் நல்ல பதில் அளித்தார். அவருக்கு நன்றி கூறுகிறோம் என்றார்.