தேவேகவுடா காலில் விழுந்து ஆசி பெற்ற பிரதாப் சிம்ஹா எம்.பி.


தேவேகவுடா காலில் விழுந்து ஆசி பெற்ற பிரதாப் சிம்ஹா எம்.பி.
x

முன்னாள் பிரதமரும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவேகவுடாவின் காலில் விழுந்து பா.ஜனதாவைச் சேர்ந்த பிரதாப் சிம்ஹா எம்.பி. ஆசி பெற்றார். அதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

மைசூரு:

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் பா.ஜனதா, ஜனதாதளம்(எஸ்) கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடும் என தகவல்கள் ெவளியாகி உள்ளது. சமீபத்தில் ஜனதாதளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவரும் முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவேகவுடா டெல்லிக்கு சென்று பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. இதனை தேவேகவுடாவும் ஒப்புக் கொண்டார். இதனால் பா.ஜனதா-ஜனதாதளம்(எஸ்) கட்சி கூட்டணி உறுதியானாலும், அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இந்த நிலையில், முன்னாள் பிரதமர் எச்.டி.தேவேகவுடா நேற்று முன்தினம் மைசூருவில் உள்ள ஆதிசுஞ்சனகிரி மடத்துக்கு சென்றார். அப்போது அவரை சந்தித்து மைசூரு-குடகு தொகுதி பா.ஜனதா எம்.பி. பிரதாப் சிம்ஹா பேசினார். அந்த சமயத்தில், பிரதாப் சிம்ஹா எம்.பி. எச்.டி.தேவேகவுடாவின் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார். இதுதொடர்பான படங்களை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பிரதாப் சிம்ஹா ெவளியிட்டுள்ளார். இந்த சந்திப்பின்போது சாமுண்டீஸ்வரி தொகுதி ஜனதாதளம்(எஸ்) எம்.எல்.ஏ. ஜி.டி.தேவேகவுடாவும் உடன் இருந்தார்.


Next Story