ஒரே காரில் சென்ற பிரதாப் சிம்ஹா-ஜி.டி.தேவேகவுடா


ஒரே காரில் சென்ற பிரதாப் சிம்ஹா-ஜி.டி.தேவேகவுடா
x

விமான நிலையத்தில் ஆலோசனை கூட்டம் முடிந்ததும் பிரதாப் சிம்ஹா எம்.பி.யும், ஜி.டி.தேவேகவுடா எம்.எல்.ஏ.வும் ஒரே காரில் சென்றனர்.

மைசூரு:

விமான நிலையத்தில் ஆலோசனை கூட்டம் முடிந்ததும் பிரதாப் சிம்ஹா எம்.பி.யும், ஜி.டி.தேவேகவுடா எம்.எல்.ஏ.வும் ஒரே காரில் சென்றனர்.

ஒரே காரில் சென்றனர்

மைசூரு நகர் மண்டஹள்ளி பகுதியில் விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலைய வளர்ச்சி பணிகள் தொடர்பாக நேற்று முன்தினம் விமான நிலைய அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் ராஜேந்திரா தலைமையில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில், பிரதாப் சிம்ஹா எம்.பி., ஜி.டி.தேவேகவுடா எம்.எல்.ஏ. மற்றும் அரசு அதிகாரிகள், விமான நிலைய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டம் முடிந்ததும் பிரதாப் சிம்ஹாவும், ஜி.டி.தேவேகவுடா எம்.எல்.ஏ.வும் ஒரே காரில் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையா?

இதனால் அவர்கள் 2 பேரும், கர்நாடகத்தில் பா.ஜனதா, ஜனதாதளம்(எஸ்) கட்சி கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இதனை ஜி.டி.தேவேகவுடா மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மண்டஹள்ளி விமான நிலையம் எனது தொகுதியில் (சாமுண்டீஸ்வரி தொகுதி) வருவதால், இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டேன்.

பிரதாப் சிம்ஹாவுடன் அரசியல் தொடர்பாக பேசவில்லை. கூட்டணி குறித்தும் பேசவில்லை. காரில் பிரதாப் சிம்ஹாவுடன் சென்றது உண்மை தான். ஆனால் கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை என்றார்.


Next Story