பீகாரில் பாதயாத்திரையை நிறுத்திய பிரசாந்த் கிஷோர்
பீகாரில் பாதயாத்திரை மேற்கொண்டிருந்த பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் அதனை நிறுத்தியுள்ளார்.
பாட்னா,
பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் 'ஜன் சுராஜ்' என்ற பெயரில் பிரசார தளம் தொடங்கினார். அதன் ஒருபகுதியாக மக்களின் மனநிலையை அறிய பீகார் முழுவதும் பாதயாத்திரை செல்வதாக அறிவித்தார். அதன்படி கடந்த ஆண்டு காந்தி ஜெயந்தி தினத்தன்று சம்பாரனில் உள்ள காந்தி ஆசிரமத்தில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளின் ஆதரவோடு தனது யாத்திரையை தொடங்கினார்.
இதற்கு பீகார் மக்கள் வரவேற்பு கொடுத்தநிலையில் கிஷோருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. டாக்டர்கள் சோதனையில் காலில் தசைகிழிவு ஏற்பட்டது தெரியவந்தது. இதனால் பாதயாத்திரையை 15 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்துவதாக பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார்.
Related Tags :
Next Story