இந்த ஆண்டு தேர்தல்: கர்நாடகாவில் பத்ரா மேலணை திட்டத்திற்கு பட்ஜெட்டில் ரூ.5 ஆயிரத்து 300 கோடி ஒதுக்கீடு


இந்த ஆண்டு தேர்தல்: கர்நாடகாவில் பத்ரா மேலணை திட்டத்திற்கு பட்ஜெட்டில் ரூ.5 ஆயிரத்து 300 கோடி ஒதுக்கீடு
x
தினத்தந்தி 1 Feb 2023 9:43 AM (Updated: 1 Feb 2023 10:21 AM)
t-max-icont-min-icon

கர்நாடகாவில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

புதுடெல்லி,

கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அம்மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, 2023-24 ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில் முக்கிய அம்சமாக புதிய வரி விதிப்பு முறையில் வருமான வரி உச்ச வரம்பு 5 லட்ச ரூபாயில் இருந்து 7 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 7 லட்சம் வரை ஆண்டு வருமானம்பெறுவோர் வருமான வரி செலுத்தவேண்டியதில்லை என்று தெரிவித்தார்.

இந்நிலையில், பட்ஜெட்டின் போது கர்நாடகாவிற்கு 5 ஆயிரத்து 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் நடைபெற்று வரும் பத்ரா மேலணை திட்டத்திற்கு 5 ஆயிரத்து 300 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.

பத்ரா மேலணை திட்டம் மத்திய கர்நாடகாவில் வறட்சி, குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மேற்கொள்ளப்படும் மேலணை திட்ட நடவடிக்கையாகும். இந்த மேலணை திட்டப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த பணிக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ. 5 ஆயிரத்து 300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மேலணை திட்டத்திற்கு 5 ஆயிரத்து 300 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என நிதி மந்திரி அறிவித்துள்ள நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.


Next Story