சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு விவகாரம்: கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அம்ருத் பாலிடம் சி.ஐ.டி. விசாரணை


சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு விவகாரம்: கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அம்ருத் பாலிடம் சி.ஐ.டி. விசாரணை
x

கர்நாடகத்தில் நடந்த போலீஸ் முறைகேடு வழக்கில் கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அம்ருத் பாலிடம் சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.

பெங்களூரு

கர்நாடகத்தில், சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு நடந்தது குறித்து சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். குறிப்பாக கர்நாடக போலீஸ் ஆள்சேர்ப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு உள்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தகுமாரிடம் நடத்திய விசாரணையில் போலீசாருக்கு முக்கிய தகவல்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், போலீசார் ஆள்சேர்ப்பு பிரிவு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி.யாக இருந்த அம்ருத் அம்ருத் பாலிடம் சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினார்கள். நேற்று காலையில் இருந்து மாலை வரை அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின்போது போலீசாருக்கு சில தகவல்கள் கிடைத்திருப்பதாக தெரிகிறது. இன்றும்(வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு ஆஜராகும்படி கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அம்ருத் பாலுக்கு சி.ஐ.டி. போலீசார் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


Next Story