காண்டிராக்டரிடம் ரூ.25 லட்சம் வாங்கி மோசடி- 4 பேரை போலீஸ் தேடுகிறது


காண்டிராக்டரிடம் ரூ.25 லட்சம் வாங்கி மோசடி- 4 பேரை போலீஸ் தேடுகிறது
x
தினத்தந்தி 30 July 2023 6:45 PM GMT (Updated: 30 July 2023 6:45 PM GMT)

ரூ.2 ஆயிரம் நோட்டுகள் கொடுப்பதாக கூறி காண்டிராக்டரிடம் ரு.25 லட்சம் வாங்கி மோசடி செய்த 4 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.

மகாலட்சுமி லே-அவுட்,

ரூ.2 ஆயிரம் நோட்டுகள் தருவதாக...

பெங்களூரு மகாலட்சுமி லே-அவுட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் சுரேஷ். இவர், கட்டிட காண்டிராக்டராக இருந்து வருகிறார். இவரை சிவு என்பவர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தன்னிடம் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் பல கோடி ரூபாய்க்கு இருப்பதாகவும், தற்போது அந்த நோட்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்திருப்பதால், ரூ.500 முக மதிப்புடைய நோட்டுகளை கொடுத்தால், கூடுதல் பணம் கொடுப்பதாகவும் சிவு கூறியுள்ளார்.

இதற்கு சுரேசும் சம்மதித்துள்ளார். மேலும் ரூ.25 லட்சத்திற்கு 500 ரூபாய் நோட்டுகளை கொடுப்பதாக சுரேஷ் கூறியுள்ளார். அதற்கு பதிலாக ரூ.37½ லட்சத்திற்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கொடுப்பதாக சிவு கூறியுள்ளார். இதையடுத்து, பணத்தை மாற்றி கொள்வதற்காக திருப்பதிக்கு வரும்படி சுரேசிடம் சிவு கூறி இருக்கிறார். அதன்படி அவரும் சென்றுள்ளார்.

ரூ.25 லட்சம் மோசடி

அங்கு வைத்து ரூ.2 ஆயிரம் நோட்டுகளை சிவு, சீனிவாஸ் உள்பட 4 பேர், சுரேசிடம் கொடுத்துள்ளனர். அதனை வாங்கி அவர் பார்த்த போது கள்ள நோட்டுகள் இல்லை, அவை அசல் நோட்டுகள் தான் என்பதை சுரேசும் உறுதி செய்திருக்கிறார். இதை

யடுத்து, சுரேசிடம் இருந்த ரூ.25 லட்சத்தை 4 பேரும் வாங்கி கொண்டுள்ளனர். பின்னர் இங்கு போலீசார் எந்த நேரமும் வந்து விடலாம், எங்களால் நீங்கள் சிக்கி கொள்ள கூடாது, அதனால் ஆந்திர மாநிலம் நெல்லூர் கேட்டில் காத்திருக்கும்படியும், அங்கு வநது ரூ.37½ லட்சத்தை தருவதாகவும் சுரேசிடம் கூறியுள்ளார்.

இதனை நம்பிய சுரேசும் நெல்லூர் கேட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் சிவு உள்பட 4 பேரும் பணத்துடன் வரவே இல்லை. 4 பேரும் தங்களது செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாகி விட்டனர். தன்னிடம் ரூ.25 லட்சத்தை வாங்கி 4 பேரும் மோசடி செய்திருப்பதை சுரேஷ் உணர்ந்தாா. இதுபற்றி மகாலட்சுமி லே-அவுட் போலீசில் சுரேஷ் புகார் அளித்தார். அதன்பேரில், சிவு, சீனிவாஸ் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.


Next Story