மணிப்பூரில் இயல்புநிலை எப்போது திரும்பும் என பிரதமர் கூற வேண்டும் - மல்லிகார்ஜுன கார்கே


மணிப்பூரில் இயல்புநிலை எப்போது திரும்பும் என பிரதமர் கூற வேண்டும் - மல்லிகார்ஜுன கார்கே
x
தினத்தந்தி 25 July 2023 7:16 AM GMT (Updated: 25 July 2023 7:27 AM GMT)

மணிப்பூர் விவகாரம் குறித்து இரு அவைகளிலும் விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றன.

புதுடெல்லி,

மணிப்பூரில் 160-க்கு மேற்பட்டோரை பலி வாங்கிய கலவரம் இன்னும் ஓயவில்லை. மாறாக அங்கு நடந்துள்ள கொடூர செயல்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகள் வெளியாகி நாட்டையே உலுக்கி வருகிறது. இதில் முக்கியமாக 2 பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டு, நிர்வாணமாக ஊர்வலம் கொண்டு சென்ற வீடியோ பதிவுகள் மக்களை பதற வைத்துள்ளன.

மணிப்பூர் விவகாரத்தை தீவிரமாக எடுத்துள்ள எதிர்க்கட்சிகள், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியின் அறிக்கை கேட்டும், இரு அவைகளிலும் விவாதிக்கக்கோரியும் நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றன.

இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் இயல்புநிலை எப்போது திரும்பும் என பிரதமர் மோடி கூற வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், வடகிழக்கு மாநிலங்களின் சூழல், வலுவற்ற தன்மை கொண்டதாக உள்ளது. மணிப்பூரில் நடக்கும் வன்முறை பிற மாநிலங்களுக்கும் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த எல்லைகளை கொண்ட மாநிலங்களுக்கு இது நல்ல சூழல் கிடையாது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி நாட்டிற்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக செயல்பட வேண்டும். மணிப்பூரில் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும், அங்கு எப்போது அமைதி திரும்பும் எனவும் பிரதமர் மோடி விளக்க வேண்டும் என்று கூறினார்.


Next Story