குஜராத்: அடல் மேம்பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி...!


குஜராத்: அடல் மேம்பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி...!
x
தினத்தந்தி 27 Aug 2022 6:55 PM IST (Updated: 27 Aug 2022 6:58 PM IST)
t-max-icont-min-icon

சபர்மதி ஆற்றங்கரை அருகே எல்லிஸ் பாலம் மற்றும் சர்தார் பாலம் இடையே கட்டப்பட்டுள்ள அடல் மேம்பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

அகமதாபாத்,

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன நிலையில், அகமதாபாத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான சபர்மதி ஆற்றங்கரையும் ஒரு தசாப்தத்தை நிறைவு செய்துள்ளது.

சுற்றுலாப் பயணிகள் மற்றும் பார்வையாளர்களின் ஆர்வத்தை மனதில் கொண்டு, எல்லிஸ் பாலம் மற்றும் சர்தார் பாலம் இடையே அடல் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த 300 மீட்டர் பாலம் சபர்மதி ஆற்றின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதியை இணைக்கிறது.

இந்த பாலம் மேற்குக் கரையில் உள்ள மலர் பூங்கா மற்றும் நிகழ்வு மைதானம் இடையே உள்ள பிளாசாவிலிருந்து கிழக்குக் கரையில் உள்ள உத்தேச கலை / கலாச்சார / கண்காட்சி மையத்தை இணைக்கிறது. அடல் மேம்பாலம் திறப்பால் சுற்றுலாபயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், சபர்மதி ஆற்றங்கரை அருகே எல்லிஸ் பாலம் மற்றும் சர்தார் பாலம் இடையே கட்டப்பட்டுள்ள அடல் மேம்பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.


Next Story