கொரோனா காலத்தில் இருந்து பிரதமர் மோடியின் செல்வாக்கு அதிகரிப்பு: ஆய்வில் தகவல்
விலைவாசி கடுமையாக உயர்வு, வேலை வாய்ப்பு இன்மை அதிகரிப்பு ஆகிய பிரச்சினைகளுக்கு இடையே பிரதமர் மோடியின் செல்வாக்கு உயர்ந்து உள்ளது.
புதுடெல்லி,
கொரோனா பெருந்தொற்று தொடங்கிய காலத்தில் இருந்து நாட்டு மக்களிடையே பிரதமர் நரேந்திர மோடி அரசின் செல்வாக்கு உச்சத்துக்குச் சென்றுள்ளதாக நாடுமுழுவதும் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
பிரதமர் மோடி ஆட்சிய பொறுப்பேற்று எட்டு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், லோக்கல் சர்க்கிள் என்ற கருத்து கணிப்பு நிறுவனம் நாடுதழுவிய அளவில் கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளது. இந்த கருத்துக் கணிப்பில் சுமார் 64,000 பேர் பங்கேற்று கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
இந்த கருத்துக்கணிப்புகளின் விவரத்தை லோக்கள் சர்க்கிள் அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு;-
*பிரதமர் மோடி தலைமையிலான அரசு எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துவருவதாக 67% பேர் தெரிவித்துள்ளனர்
*வேலையில்லா திண்டாட்டத்தை மோடி அரசு சிறப்பாக கையாள்வதாக 37% மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
*கருத்துக் கணிப்பு கேட்கப்பட்டவர்களில் 47% பேர் மோடி அரசு அதுபற்றி பேசவில்லை என்று என்றும் தங்கள் வருத்தத்தை பதிவு செய்துள்ளனர்.
*காற்றின் தரத்தை மேம்படுத்தவும், மாசுபாட்டைக் குறைக்கவும் பிரதமர் மோடி அரசு போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று 44% பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
*மத ஒற்றுமையை திறமையுடன் மோடி அரசு பேணி காத்து வருவதாக 67% பேர் கூறியுள்ளனர்.
*அதேசமயம் 33% பேர் கருத்துக் கூறவில்லை.
* 50 % மேற்பட்டவர்கள் இந்தியாவில் தொழில் செய்வது எளிதாக இருப்பதாக கருத்து கூறியுள்ளனர்.
விலைவாசி கடுமையாக உயர்வு, வேலை வாய்ப்பு இன்மை அதிகரிப்பு ஆகிய பிரச்சினைகளுக்கு இடையே பிரதமர் மோடியின் செல்வாக்கு உயர்ந்து உள்ளது.