வெங்கையா நாயுடுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு


PM Modi meets Venkaiah Naidu
x

Image Courtesy : @narendramodi

முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை பிரதமர் மோடி நேரில் சந்தித்து பேசினார்.

புதுடெல்லி,

இந்தியாவின் 13-வது துணை ஜனாதிபதியாக பதவியேற்றவர் வெங்கையா நாயுடு. இவர் ஆகஸ்ட் 11, 2017 முதல் ஆகஸ்ட் 10, 2022 வரை துணை ஜனாதிபதியாக பதவி வகித்தார். சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி 3-வது முறை பதவியேற்ற நிலையில், இன்று வெங்கையா நாயுடுவை அவரது இல்லத்திற்கு சென்று பிரதமர் மோடி நேரில் சந்தித்து பேசினார்.

இது குறித்து தனது 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, "வெங்கையா நாயுடுவுடன் பல ஆண்டுகள் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்தியாவின் வளர்ச்சி குறித்த அவரது ஞானம் மற்றும் ஆர்வத்தைக் கண்டு நான் எப்போதும் வியந்திருக்கிறேன். நாங்கள் 3-வது முறை வெற்றி பெற்றதற்காக வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்தார்" என்று பதிவிட்டுள்ளார்.

அதே போல் வெங்கையா நாயுடு தனது 'எக்ஸ்' தளத்தில், "இந்தியாவின் பிரதமராக 3-வது முறை பதவியேற்றுள்ள நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்தேன். தேசிய நலன் சார்ந்த விஷயங்கள் குறித்து நாங்கள் விவாதித்தோம். இனி வரும் ஆண்டுகளில் மோடியின் தலைமையில் இந்தியா புதிய உயரங்களை அடையும் என்ற நம்பிக்கை உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.




Next Story