புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் 75 ரூபாய் நாணயத்தை வெளியிட்ட பிரதமர் மோடி...!


புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் 75 ரூபாய் நாணயத்தை வெளியிட்ட பிரதமர் மோடி...!
x

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி 75 ரூபாய் நாணயம் மற்றும் தபால் தலையை வெளியிட்டார்.

புதுடெல்லி

புதிய நாடாளுமன்ற கட்டிடம் இன்று திறந்து வைக்கப்பட்டது. நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

பின்னர், புதிய நாடாளுமன்றத்தில் செங்கோலை பிரதமர் மோடி நிறுவினார். பின்னர், புதிய நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றினர்.

இதனை தொடர்ந்து நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூறும் வகையில் 75 ரூபாய் நாணயம் மற்றும் நினைவு தபால் தலையை பிரதமர் வெளியிட்டார். ஏற்கனவே 1 ரூபாய் ,2 ரூபாய், 5ரூபாய் ,10ரூபாய் ,20 ரூபாய் நாயணங்கள் புழக்கத்தில் உள்ள நிலையில் அந்த வரிசையில் 75 ரூபாய் நாணயமும் இணைந்தது.

44 மில்லிமீட்டர் சுற்றளவு மற்றும் 35 கிராம் எடையும் கொண்ட நாணயம் பல உலோகத்தின் கலவையால் ஆனது.நாணயமானது 50 சதவீதம் வெள்ளி,40 சதவீதம் தாமிரம்,5 சதவீதம் நிக்கல் மற்றும் 5 சதவீதம் துத்தநாகத்தலும் ஆனது. இந்த நாணயத்தின் ஒரு புறம் புதிய நாடாளுமன்ற கட்டிடமும்,மறுபுறம் அசோக சின்னமும் பொறிக்கப்பட்டுள்ளது.


Next Story