உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு


உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு
x

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

புதுடெல்லி,

உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஏழரை மாதங்களுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இப்போரில் உக்ரைன் நாட்டு நகரங்களை ரஷியா படைகள் கைப்பற்றின. இதற்கிடையே போரில் கைப்பற்றிய உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை ரஷியாவுடன் இணைப்பதாக அறிவிக்கப்பட்டது.

மேலும் ரஷிய படையிடம் இருந்து உக்ரைனின் முக்கிய நகரை உக்ரைன் ராணுவம் மீட்டுள்ளது. உக்ரைனில் நடந்துவரும் போரில் ரஷிய ராணுவத்துக்காக அதிக எண்ணிக்கையிலான வீரர்களை அணி திரட்ட உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உக்ரைன்-ரஷியா போர் நிலவரம் குறித்து உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தையின் உக்ரைனில் நிலவிவரும் சூழல் குறித்து இரு நாட்டு தலைவர்களும் விவாதித்துள்ளதாகவும், போரை நிறுத்துவதற்கு ராணுவம் மூலம் தீர்வு காண முடியாது என்றும் தூதரகம் வாயிலாக பேச்சுவார்த்தையை துவங்க வேண்டியது அவசியம் எனவும் , உக்ரைன் - ரஷ்யா இடையேயான பிரச்னைக்கு அமைதி வழியில் தீர்வு காண, இந்தியா பங்காற்ற தயாராக இருப்பதாக மோடி தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன


Next Story