தென்ஆப்பிரிக்க, பிரேசில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி அளித்த பரிசுகள்


தென்ஆப்பிரிக்க, பிரேசில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி அளித்த பரிசுகள்
x
தினத்தந்தி 26 Aug 2023 5:52 AM IST (Updated: 26 Aug 2023 6:03 AM IST)
t-max-icont-min-icon

'பிரிக்ஸ்' மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடி, அங்கு தலைவர்களுக்கு இந்திய பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் கலை பொருட்களையும், பழமையான பொருட்களையும் பரிசளித்தார்.

ஜோகன்னஸ்பர்க்,

'பிரிக்ஸ்' மாநாட்டில் பங்கேற்க தென்ஆப்பிரிக்காவுக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு தலைவர்களுக்கு இந்திய பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் கலை பொருட்களையும், பழமையான பொருட்களையும் பரிசளித்தார்.

தென்ஆப்பிரிக்க அதிபர் சிறில் ரமாபோசாவுக்கு தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 'சுராஹி' என்ற ஒரு ஜோடி குடுவையை பரிசளித்தார். சிறில் ரமாபோசாவின் மனைவிக்கு நாகாலாந்து மாநில பழங்குடியினரால் நெய்யப்பட்ட பாரம்பரிய சால்வையை வழங்கினார்.

பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவுக்கு மத்தியபிரதேசத்தை சேர்ந்த பழங்குடியினரின் கோண்ட் ஓவியத்தை பரிசாக அளித்தார். இந்த ஓவியம், சுவர் மற்றும் தரையில் பொருத்தப்படுகிறது.


Next Story