ஒடிசாவின் முதல் வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்..!


ஒடிசாவின் முதல் வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்..!
x

ஒடிசாவின் முதல் வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

புதுடெல்லி,

ஒடிசாவின் முதல் வந்தே பாரத் ரெயில் சேவையை டெல்லியில் இருந்து பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரயில் ஒடிசா மாநிலத்தின் பூரியில் இருந்து மேற்கு வங்க மாநிலம் ஹவுரா வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர் ஒடிசாவில் ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு ரெயில்வே திட்ட பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மேலும் பல்வேறு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். பூரி மற்றும் கட்டாக் ரெயில்வே நிலையங்களை மறுகட்டமைப்பு செய்வதற்கான பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். இந்த மறுகட்டமைப்புடன் கூடிய ரெயில் நிலையங்கள், அனைத்து வித நவீன வசதிகளையும் உள்ளடக்கி, ரெயில் பயணிகளுக்கு உலக தரம் வாய்ந்த அனுபவம் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் ஹவுரா மற்றும் பூரி இடையே மத, கலாச்சார மற்றும் ஆன்மீக இணைப்பை மேலும் வலுப்படுத்தும். நம் நாடு சொந்தமாக வந்தே பாரத் ரெயில்களை தயாரித்து பல்வேறு மாநிலங்களுக்கு அர்பணித்து வருகிறது. இன்று, நம் நாடு 5-ஜியை சொந்தமாக தயாரித்து தொலைதூர பகுதிகளுக்கு விநியோகித்து வருகிறது என்று கூறினார்.



Next Story