சரக்கு போக்குவரத்து திறனை மேம்படுத்துவதன் மூலம் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் கோடி சேமிக்கலாம்: மந்திரி பியூஷ் கோயல்


சரக்கு போக்குவரத்து திறனை மேம்படுத்துவதன் மூலம் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் கோடி சேமிக்கலாம்: மந்திரி பியூஷ் கோயல்
x

பிரதம மந்திரி தேசிய பெருந்திட்டம் தொடங்கப்பட்டதன் முதலாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் பயிலரங்கில் மத்திய மந்திரி பியூஷ் கோயல் உரையாற்றினார்.

புதுடெல்லி,

பிரதம மந்திரி காடிசக்தி தேசிய பெருந்திட்டம் தொடங்கப்பட்டதன் முதலாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், புதுடெல்லியில் நடைபெற்ற பயிலரங்கில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல் உரையாற்றினார்.

தேசிய பெருந்திட்டம் மூலம் இதுவரை மேற்கொள்ளப்பட்ட சாதனைகள், வளர்ச்சிப் பணிகள் மற்றும் அதை முன்னெடுத்துச் செல்வது குறித்து பயிலரங்கில் விவாதிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பேசிய மந்திரி பியூஷ் கோயல், "சரக்கு போக்குவரத்து திறனை மேம்படுத்துவதன் மூலம் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் கோடி சேமிக்கும் திறன் பிரதம மந்திரி காடிசக்தி தேசிய பெருந்திட்டத்திற்கு உள்ளது.

சிறந்த உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக சமூகத்துறையில் இத்திட்டத்தின் உபயோகம் அதிகரித்துள்ளது. அத்துடன் தொழில்நுட்பத்தின் பயனை நாட்டின் அனைத்து மக்களுக்கும் கொண்டு சென்று சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரம் எளிதாக்கப்பட்டுள்ளது.

வருங்காலங்களில் இந்தியாவின் எதிர்காலத்தை இத்திட்டம் தீர்மானிக்கும்" என்று கூறினார்.


Next Story