பெங்களூரு சிட்டி உள்பட 5 ரெயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் கட்டணம் ரூ.20 ஆக உயர்வு


பெங்களூரு சிட்டி உள்பட 5 ரெயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் கட்டணம் ரூ.20 ஆக உயர்வு
x
தினத்தந்தி 1 Oct 2022 12:15 AM IST (Updated: 1 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு சிட்டி உள்பட 5 ரெயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் கட்டணம் ரூ.20 ஆக உயர்த்தி தென்மேற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

பெங்களூரு:

பெங்களூருவில் சிட்டி ரெயில் நிலையம் உள்பட 5 ரெயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பவதாவது:-

தசரா, ஆயுத பூஜை உள்ளிட்ட காரணங்களால் பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பெங்களூருவில் இருந்து பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர். இதனால் பெங்களூருவில் சிட்டி ரெயில் நிலையம் உள்பட 5 முக்கிய ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும். எனவே, கூட்ட நெரிசலை தவிர்க்கும் நோக்கில் கே.எஸ்.ஆர். பெங்களூரு (சிட்டி), கண்டோண்மெண்ட், யஸ்வந்தபுரம், கே.ஆர்.புரம், சர் எம்.விஸ்வேசுவரய்யா ரெயில் முனையம் ஆகிய 5 ரெயில் நிலையங்களில் தற்காலிகமாக நடைமேடை டிக்கெட் கட்டணம் ரூ.10-ல் இருந்து ரூ.20-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண முறை நாளை (இன்று) முதல் வருகிற 31-ந் தேதி வரை அமலில் இருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.


Next Story