அக்னிபத் திட்டத்திற்கு எதிரான பொதுநல மனுக்கள் - வரும் 15-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை


அக்னிபத் திட்டத்திற்கு எதிரான பொதுநல மனுக்கள் - வரும் 15-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
x

அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்கள் மீது விசாரணை.

புதுடெல்லி,

முப்படைகளில் 4 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை சேர்க்கும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு மாநிலங்களில் போராட்டமும், வன்முறை சம்பவங்களும் நடந்தன.

குறிப்பாக தெலுங்கானா, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் ஏராளமான இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். சில இடங்களில் ரயில் எரிப்பு சம்பவங்களும், வன்முறைகளும் அரங்கேறின.

இந்த நிலையில் அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் பல பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்களை வரும் 15-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க உள்ளது.


Next Story