பிஎப்ஐ அமைப்பின் இணையதள பக்கம் முடக்கம்
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் இணைதள பக்கத்தை மத்திய அரசு முடக்கியுள்ளது.
புதுடெல்லி,
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பை மத்திய அரசு இன்று சட்டவிரோத அமைப்பாக அறிவித்தது. மேலும், பிஎப்ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு அதிரடி உத்தவை பிறப்பித்துள்ளது.
இந்த தடை உத்தரவை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள பிஎப்ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளின் அலுவலகங்களுக்கு சீல் வைக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது.
இந்நிலையில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை மத்திய அரசு முடக்கியுள்ளது. இணையதள பக்கத்தை போன்று பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் பேஸ்புக், டுவிட்டர், யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்பட சமூகவலைதள பக்கங்களையும் முடக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
Related Tags :
Next Story