பி.எப்.ஐ. அமைப்புடன் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை எச்சரிக்கை


பி.எப்.ஐ. அமைப்புடன் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை எச்சரிக்கை
x
தினத்தந்தி 29 Sept 2022 12:15 AM IST (Updated: 29 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ள பி.எப்.ஐ. அமைப்புடன் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

பெங்களூரு:

மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ள பி.எப்.ஐ. அமைப்புடன் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

மத்திய அரசு தடை

மத்திய அரசு பி.எப்.ஐ. அமைப்புக்கு தடை விதித்துள்ளது. இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பதிலளிக்கையில் கூறியதாவது:-

நாட்டில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா(பி.எப்.ஐ.) அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த நடவடிக்கையை நான் வரவேற்கிறேன். சட்டவிரோதமாக செயல்படும் அமைப்புகளை ஒடுக்குவதில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் திறன் மிக்கவர்களாக உள்ளனர். பி.எப்.ஐ.க்கு தடை விதித்திருக்கும் நடவடிக்கை பிற அமைப்புகளுக்கும் ஒரு எச்சரிக்கை மணி.

சமூக விரோத செயல்கள்

மோடி, அமித்ஷா ஆகியோரின் திடமான தலைமை இருக்கும்போது, தீய நோக்கங்கள் கொண்ட சக்திகளுக்கு இடம் இல்லை என்பது தெளிவாக எடுத்து கூறப்பட்டுள்ளது. பி.எப்.ஐ. அமைப்பில் பலர் வெளிநாடுகளுக்கு சென்று பயிற்சி பெற்று வந்துள்ளனர். அந்த அமைப்பினர் பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடகத்திலும் அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.

தேசத்துரோக செயல்களில் ஈடுபட்டு வந்த அந்த அமைப்புக்கு தடை விதிக்குமாறு நாடு முழுவதும் மக்கள் குரல் எழுப்பினர். எதிர்க்கட்சிகளும் அழுத்தம் கொடுத்தன. அதனால் அந்த அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்டுள்ள அந்த அமைப்புடன் யாரும் தொடர்போ அல்லது உறவோ வைத்து கொள்ளக்கூடாது.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.


Next Story