பி.எப்.ஐ. அமைப்பை வேட்டையாடிய மத்திய அரசு; கர்நாடக பா.ஜனதா கருத்து


பி.எப்.ஐ. அமைப்பை வேட்டையாடிய மத்திய அரசு; கர்நாடக பா.ஜனதா கருத்து
x
தினத்தந்தி 29 Sept 2022 12:15 AM IST (Updated: 29 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பி.எப்.ஐ. அமைப்பை மத்திய அரசு வேட்டையாடியதாக கர்நாடக பா.ஜனதா கருத்து தெரிவித்துள்ளது.

பெங்களூரு:

கர்நாடக பா.ஜனதா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

சித்தராமையா அவர்களே நாங்கள் கூறியபடி நடந்து கொண்டுள்ளோம். நாட்டின் பாதுகாப்புக்கு சவாலாக விளங்கிய பி.எப்.ஐ. அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. நீங்கள் (சித்தராமையா) வளர்த்த அமைப்பை நாங்கள் வேட்டையாடி உள்ளோம். பிரதமர் மோடி அரசின் இந்த நடவடிக்கையை நாங்கள் வரவேற்கிறோம். இதற்காக பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். மதவாத சக்திகளுக்கு எதிரான இத்தகைய நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

அந்த பி.எப்.ஐ., முன்பு தடை செய்யப்பட்ட 'சிமி' அமைப்பை போன்றது ஆகும். அந்த அமைப்பு பல்வேறு சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் மத்திய அரசுக்கு கிடைத்தன. அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக தேசபக்தர்கள் சார்பில் மத்திய அரசுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம்.

இவ்வாறு பா.ஜனதா தெரிவித்துள்ளது.


Next Story