பஞ்சாப்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு


பஞ்சாப்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு
x

பஞ்சாப்பில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி உயர்த்தப்பட்டுள்ளது. அரசின் வருவாயைப் பெருக்குவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அமிர்தசரஸ்,

பஞ்சாபில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்தபோது மின் கட்டணத்தில் ரூ.3 மானியமாக வழங்கப்பட்டது. தற்போது இந்த மின் கட்டண மானியத்தை தற்போதைய ஆம் ஆத்மி அரசு ரத்து செய்துள்ளது. மின் கட்டணத்துக்கு மானியம் வழங்குவதால் அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.1,500 கோடி முதல் ரூ.1,800 கோடி வரை கூடுதல் செலவாகிறது. எனவே மின் கட்டண மானியத்தை அரசு ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

மேலும் பெட்ரோல் மீதான வாட் வரியை லிட்டருக்கு 61 பைசாவும், டீசலுக்கு 92 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது. மொகாலியில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.97.01 ஆகவும், டீசலின் விலைரூ.87.21ஆகவும் உள்ளது. கடுமையான நிதி நெருக்கடியில் பஞ்சாப் அரசு தவித்து வருவதால் வருவாயை பெருக்கும் விதமாக இந்த நடவடிக்கையை பகவந்த்மான் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.


Next Story