பீகார் அரசின் சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் - பாட்னா கோர்ட்டில் தள்ளுபடி


பீகார் அரசின் சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் - பாட்னா கோர்ட்டில் தள்ளுபடி
x

சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பாட்னா,

பீகார் மாநிலத்தில் முதல்-மந்திரி நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பீகார் அரசு முடிவு செய்தது. முதல் கட்ட கணக்கெடுப்பு, ஜனவரி 7-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை நடந்தது. இரண்டாவது கட்ட கணக்கெடுப்பு கடந்த ஏப்ரல் 15-ந் தேதி தொடங்கப்பட்டு, மே 15-ந்தேதி வரை நடத்தப்பட இருந்தது.

இதனிடையே சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக பாட்னா ஐகோர்ட்டில் வழக்குகள் தொடுக்கப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், பீகார் அரசின் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு இடைக்கல தடை விதித்து உத்தரவிட்டனர்.

இருப்பினும், பீகாரில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்றும், மக்களுக்கு சிறப்பாக சேவையாற்ற ஏதுவாக அவர்களின் பொருளாதார நிலைமை மற்றும் சாதி பற்றிய விவரங்கள்தான் சேகரிக்கப்படுகின்றன என முதல்-மந்திரி நிதிஷ் குமார் கூறி வருகிறார்.

இந்த நிலையில் பாட்னா கோர்ட்டில் இது தொடர்பான வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்த போது, பீகார் அரசின் சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story