முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பான மனு - சுப்ரீம் கோர்ட் இன்று விசாரணை


முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பான மனு - சுப்ரீம் கோர்ட் இன்று விசாரணை
x

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பான மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.

புதுடெல்லி,

முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை நீதிபதி ஏ.எம்.கான்வேகர் விசாரித்து வந்தார். இந்த நிலையில் அவர் தற்போது ஓய்வு பெற்றதை தொடர்ந்து இந்த வழக்குகளை மீண்டும் அவசரமாக விசாரிக்கக்கோரி மனுதாரர்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அமர்வு முன் முறையிடப்பட்டது.

அப்போது இது தொடர்பான் ஆவணங்களை அளித்தால், விரிவான விசாரணைக்கு உத்தரவிடுவதாக நீதிபதி தெரிவித்தார். இதையடுத்து ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், இனி முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை நீதிபதி எம்.ஆர். ஷா தலைமையிலான அமர்வு முன் பட்டியலிட பதிவாளர் அலுவலகத்திற்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.

இதன்படி முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் நீதிபதி எம்.ஆர். ஷா தலைமையிலான அமர்வு முன் பட்டியலிடப்படுகிறது. இந்த மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.


Next Story