வி.சோமண்ணா, முதல்-மந்திரியாக கடவுளிடம் மக்கள் வேண்டிக்கொள்ள வேண்டும்; ஜி.டி.தேவேகவுடா எம்.எல்.ஏ. பேச்சு
வி.சோமண்ணா, முதல்-மந்திரியாக கடவுளிடம் மக்கள் வேண்டிக்கொள்ள வேண்டும் என ஜி.டி.தேவேகவுடா எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
மைசூரு;
மைசூரு சாமுண்டீஸ்வரி தொகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஜி.டி.தேவேகவுடா எம்.எல்.ஏ கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- தினமும் கடவுளிடம் தீபம் வைத்து மக்கள் வேண்டுதல் செய்யுங்கள். மாநில வீட்டு வசதித்துறை மந்திரியாக இருக்கும் வி.சோமண்ணா முதல்-மந்திரியாகவேண்டும்.
அதைத்தான் நானும் விரும்புகிறேன். ஏனென்றால், சோமண்ணாவை போல் மக்கள் பணிகளில் இதுவரை யாரும் ஈடுபடவில்லை. அவரை, நான் 18 வயது இளைஞராக இருக்கும்போது இருந்தே பார்த்து கொண்டிருக்கிறேன். ஓடி, ஆடி வேலை பார்ப்பதில் அவருக்கு நிகர் யாரும் இல்லை.
ஏழைகளின் வாய்ச்சொல் மற்றும் வேண்டுதல்களுக்கு அதிகளவு பலன் உண்டு. அதேபோல் திருநங்கைகள் மற்றும் சமுதாயத்தில் மிகவும் பின்தங்கியவர்களின் வேண்டுதலுக்கும் வலிமை உண்டு. அனைவரும், சோமண்ணா முதல்-மந்திரியாகவேண்டும் என்று கடவுளை வேண்டுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.