ஆந்திர துணை முதல்-மந்திரியாக பவன் கல்யாண் பொறுப்பேற்றார்


ஆந்திர துணை முதல்-மந்திரியாக பவன் கல்யாண் பொறுப்பேற்றார்
x

நடந்து முடிந்த ஆந்திர சட்டமன்ற தேர்தலில் பவன் கல்யாண் தலைமையிலான ஜனசேனா கட்சி 21 தொகுதிகளில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

அமராவதி,

ஆந்திர சட்டமன்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 175 இடங்களில் 135 தொகுதிகளில் தெலுங்குதேசம் வென்றது. சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற சந்திரபாபு நாயுடு கடந்த 12ம் தேதி அம்மாநில முதல்-மந்திரியாக பதவியேற்றுக் கொண்டார். இவரை தொடர்ந்து, ஜனசேனா தலைவர் பவன் கல்யாண், சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ், அச்சன்நாயுடு, நாதெண்டலா மனோகர் உள்ளிட்டவர்களும் மந்திரிகளாக பதவியேற்றனர்.

அதனை தொடர்ந்து, நேற்று தலைமை செயலகத்திற்கு சென்று முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவை சந்தித்த பவன் கல்யாண் தனக்கு ஒதுக்கப்பட்ட பஞ்சாயத்துராஜ் துறைகள் குறித்து கேட்டறிந்தார்.

இந்த நிலையில், இன்று துணை முதல்-மந்திரி அலுவலகத்திற்கு சென்ற பவன் கல்யாண் கோப்புகளை கையெழுத்திட்டு ஆந்திராவின் துணை முதல்-மந்திரியாக பதவியேற்றுக்கொண்டார். இதனையடுத்து, அவருக்கு சமூக வலைத்தளங்களிலும் வாழ்த்து செய்திகள் குவிந்து வருகிறது. நடந்து முடிந்த ஆந்திர சட்டமன்ற தேர்தலில் பவன் கல்யாண் தலைமையிலான ஜனசேனா கட்சி 21 தொகுதிகளில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.


Next Story