இந்திய வான்வழியே 2.4 கிலோ போதை பொருளுடன் ஊடுருவிய பாகிஸ்தானின் ஆளில்லா விமானம்


இந்திய வான்வழியே 2.4 கிலோ போதை பொருளுடன் ஊடுருவிய பாகிஸ்தானின் ஆளில்லா விமானம்
x

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் போதை பொருளுடன் ஊடுருவிய ஆளில்லா விமானம் ஒன்றை எல்லை பாதுகாப்பு படையினர் கைப்பற்றி உள்ளனர்.


லூதியானா,


பாகிஸ்தான் நாட்டில் இருந்து பயங்கரவாதிகள் உதவியுடன், ஆயுதங்கள், போதை பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன என குற்றச்சாட்டு நீண்டகாலம் இருந்து வருகிறது. பயங்கரவாதம் மற்றும் போதை பொருள் ஒழிப்பு பற்றி சர்வதேச அளவில் இந்தியாவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில், பஞ்சாப்பின் தார்ன் தரன் பகுதியில் காலியா என்ற கிராமம் அருகே பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ஆளில்லா விமானம் ஒன்று ஊடுருவி வந்துள்ளது.

அந்த ஆளில்லா விமானத்தில் 2.4 கிலோ எடை கொண்ட ஹெராயின் என்ற வகையை சேர்ந்த போதை பொருள் கடத்தி வரப்பட்டு உள்ளது. இதனை, எல்லையில் ரோந்து மற்றும் பாதுகாப்பு படையில் ஈடுபட்டு இருந்த எல்லை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


Next Story