காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கி சூடு; பி.எஸ்.எப். வீரர் காயம்


காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கி சூடு; பி.எஸ்.எப். வீரர் காயம்
x

ஜம்மு மற்றும் காஷ்மீரில் முதல்கட்ட சட்டசபை தேர்தல் வருகிற 18-ந்தேதி நடைபெற உள்ள நிலையில், போர்நிறுத்த ஒப்பந்த விதிமீறலில் பாகிஸ்தான் ஈடுபட்டு உள்ளது.

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியருகே எல்லை பாதுகாப்பு படையினர் (பி.எஸ்.எப்.) ரோந்து மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று அதிகாலை 2.35 மணியளவில் அக்னூர் பகுதியில் முன்னறிவிப்பின்றி எல்லை பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

உடனடியாக பி.எஸ்.எப். வீரர்களும் இதற்கு பதிலடி கொடுத்தனர். பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கி சூட்டில் பி.எஸ்.எப். வீரர் ஒருவர் காயமடைந்து உள்ளார் என பி.எஸ்.எப்.பின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து, சர்வதேச எல்லை மற்றும் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியருகே கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். எனினும், பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய விவரங்கள் உடனடியாக தெரிய வரவில்லை.

2021-ம் ஆண்டு பிப்ரவரி 25-ந்தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஒன்று புதுப்பிக்கப்பட்டது. இதன்பின்னர் இரு நாடுகளிடையே, போர்நிறுத்த ஒப்பந்த விதிமீறல்கள் நடப்பது மிக அரிது என்ற அளவிலேயே காணப்பட்டது.

கடந்த ஆண்டு ராம்கார் பிரிவு பகுதியில் பாகிஸ்தான் படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பி.எஸ்.எப். வீரர் ஒருவர் பலியானார். இந்நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடப்பு மாதம் 18-ந்தேதி முதல்கட்ட சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சமீபத்திய போர்நிறுத்த ஒப்பந்த விதிமீறல் நடந்துள்ளது.


Next Story