தமிழ்நாட்டில் இருந்து ஜம்பு உயிரியல் பூங்காவுக்கு ஒரு ஜோடி வங்கப் புலிகள் வருகை


தமிழ்நாட்டில் இருந்து ஜம்பு உயிரியல் பூங்காவுக்கு ஒரு ஜோடி வங்கப் புலிகள் வருகை
x

நவம்பர் 25 அல்லது 26 ஆம் தேதி தனிமைப்படுத்தல் காலம் முடிந்ததும் உயிரியல் பூங்காவில் இணைக்கப்படும்.

ஜம்மு,

தமிழ்நாட்டிலிருந்து நேற்று ஜம்முவில் உள்ள ஜம்பு உயிரியல் பூங்காவிற்கு ஒரு ஜோடி வங்கப் புலிகள் கொண்டு வரப்பட்டன. ஒரு ஜோடி இமயமலை கருப்பு கரடிகளுக்கு ஈடாக இந்த புலிகள் இங்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக வனவிலங்கு காப்பாளர் அமித் சர்மா கூறியதாவது,

இந்த வங்கப் புலிகளில் ஒன்று ஆண் புலி, மற்றொன்று பெண் புலி. விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் ஒரு பகுதியாக இவை அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. ஒரு ஜோடி இமயமலை கருப்பு கரடிகளுக்கு ஈடாக புலிகள் இங்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இவை இங்கு ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படும்.

முன்னதாக, நவம்பர் 8 ஆம் தேதி, ஒரு ஜோடி ஆசிய சிங்கங்கள் குஜராத்தில் இருந்து ஜம்பு உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டன. அந்த ஆசிய சிங்கங்கள் அடுத்த மூன்று நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டிருக்கும்.

இன்று, புதிதாக சேர்ந்த வங்கப் புலிகள் முதலில் ஹீட்டர் அறையில் வைக்கப்பட்டு, பின்பு அவை பழகுவதை பொருத்து மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தின் விதிமுறைகளின்படி, 4,500 சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்ட சுற்றுச்சுவருடன் கூடிய இயற்கையான திறந்த வெளி வளாகத்தில் விடப்படும்.

நவம்பர் 25 அல்லது 26 ஆம் தேதி அவற்றின் தனிமைப்படுத்தல் காலம் முடிந்ததும் உயிரியல் பூங்காவில் இணைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story