நீட் தேர்வு: விண்ணப்பித்தோர் எண்ணிக்கை 18 லட்சத்தை தாண்டியது


நீட் தேர்வு: விண்ணப்பித்தோர் எண்ணிக்கை 18 லட்சத்தை தாண்டியது
x

இளங்கலை மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு வருகிற ஜூலை மாதம் 17-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.

புதுடெல்லி,

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு 'நீட்' நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்த தேர்வில் மாணவ-மாணவிகள் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலேயே இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கடந்த 2016-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2022-23-ம் கல்வியாண்டுக்கான இளங்கலை மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு வருகிற ஜூலை மாதம் 17-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.

நீட் தோ்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிப்பது கடந்த ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி தொடங்கியது. மே மாதம் 6-ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் மே 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டநிலையில், மேலும், மே 20 ஆம் தேதி இரவு 9 மணி வரை அவகாசத்தை நீட்டித்து தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இளநிலை மருத்துவ படிப்புகளுக்காக நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை முதல்முறையாக 18 லட்சத்தைத் தாண்டியுள்ளது என்று தேசிய தோ்வுகள் முகமைக்கு (என்டிஏ) தெரிவித்துள்ளது.


Next Story