மூளைச்சாவு அடைந்த மாணவியின் உடல் உறுப்புகள் தானம்


மூளைச்சாவு அடைந்த மாணவியின்  உடல் உறுப்புகள் தானம்
x
தினத்தந்தி 21 Sept 2022 6:45 PM (Updated: 21 Sept 2022 6:45 PM)
t-max-icont-min-icon

சிக்கமகளூருவில் மூளைச்சாவு அடைந்த மாணவியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளது.

சிக்கமகளூரு:

சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா சோமனஹள்ளியை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் நாயக். இவரது மனைவி லட்சுமி பாய். இந்த தம்பதிக்கு ரக்‌ஷிதா (வயது 16) என்ற மகள் இருந்தார். இவர் சிக்கமகளூரு பசவனஹள்ளியில் உள்ள அரசு பி.யூ. கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை ரக்‌ஷிதா கல்லூரிக்கு செல்ல அங்கு வந்த பஸ்சில் ஏற முயன்றார். ஆனால் அதற்குள் டிரைவர் பஸ்சை இயக்கிவிட்டார். இதனால் கால் தவறி பஸ்சில் இருந்து விழுந்த அவர் தலையில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினார்.

இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சிக்கமகளூரு மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க பெற்றோர் முடிவு செய்தனர். அதன்படி அவர் உடல் உறுப்புகள் இன்று அறுவை சிகிச்சை செய்து தானமாக பெறப்படுகிறது. பின்னர் 2 ஹெலிகாப்டர்கள் மூலம் உடல் உறுப்புகள் தேவையான நோயாளிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.


Next Story