'தேனி மக்களவை தொகுதி வெற்றி செல்லாது' தீர்ப்பை எதிர்த்து ஓ.பி. ரவீந்திரநாத் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு..!


தேனி மக்களவை தொகுதி வெற்றி செல்லாது தீர்ப்பை எதிர்த்து ஓ.பி. ரவீந்திரநாத் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு..!
x
தினத்தந்தி 30 July 2023 9:44 AM IST (Updated: 30 July 2023 10:16 AM IST)
t-max-icont-min-icon

தேனி மக்களவை தொகுதியில் ஓ.பி. ரவீந்திரநாத் பெற்ற வெற்றி செல்லாது என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது.

புதுடெல்லி,

2019ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் ஓ.பி.ரவீந்திரநாத் பெற்ற வெற்றி செல்லாது என்ற சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து, ஓ.பி. ரவீந்திரநாத் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2019ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில், தேனி தொகுதியில் அதிமுக சார்பில் ஓ.பி. ரவீந்திரநாத் போட்டியிட்டு 76,319 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக்கோரி தேனி தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, ஓ.பி. ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.


Next Story