20 காணொலி கோர்ட்டு விசாரணையில் போக்குவரத்து விதிமீறலுக்கு ஆன்லைன் மூலம் ரூ.258 கோடி அபராதம் வசூல்..!
20 காணொலி கோர்ட்டு விசாரணையில் போக்குவரத்து விதிமீறலுக்கு ஆன்லைன் மூலம் ரூ.258 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
தமிழ்நாடு, கர்நாடகா, மராட்டியம் உள்பட 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் காணொலி மூலம் இயங்கும் 20 கோர்ட்டுகள் இயங்கி வருகின்றன.
கடந்த மாதம் 1-ந்தேதிவரை அந்த கோர்ட்டுகள் 1 கோடியே 59 லட்சம் வழக்குகளை கையாண்டுள்ளன. அவற்றில், போக்குவரத்து விதிமீறலுக்கான சுமார் 25 லட்சம் வழக்குகள் மூலம் ரூ.258 கோடி ஆன்லைன் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு மைல்கல் என்று மத்திய சட்ட அமைச்சகத்தின் கீழ் உள்ள நீதித்துறை கூறியுள்ளது.
Related Tags :
Next Story