மத்திய பல்கலைக்கழகங்களில் 45 துணைவேந்தர் பதவிகளில் எஸ்.சி, எஸ்.டி பிரிவிலிருந்து தலா ஒருவர் மட்டுமே நியமனம் - மத்திய அரசு
மத்திய கல்வி நிலையங்களில் ஆசிரியர் பணியிடங்களில் இடஒதுக்கீடு உறுதி செய்யப்படுகிறது.
புதுடெல்லி,
மத்திய பல்கலைக்கழகங்களில் 45 துணை வேந்தர் பதவிகளில், பட்டியலின மற்றும் பழங்குடியின வகுப்பை சார்ந்தவர்களில், தலா ஒருவர் மட்டுமே துணை வேந்தர் பதவி வகித்து வருகின்றனர்.
மத்தியக் கல்வி நிலையங்களில் ஆசிரியர் பணிக்கான, இடஒதுக்கீடு முறை பின்பற்றுவது குறித்து சமாஜ்வாடி கட்சி எம்.பி ஷபிகுர் ரஹ்மான் மக்களவையில் கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார். இந்த கேள்விக்கு, மத்திய கல்வித்துறை இணை மந்திரி சுபாஷ் சர்கார் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.
மந்திரி அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது, மத்திய கல்வி நிலையங்களில் ஆசிரியர் பணியிடங்களில் இடஒதுக்கீடு உறுதி செய்யப்படுகிறது. 45 மத்திய அரசு பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிகளில், பட்டியல் சாதியில் ஒருவரும், பட்டியலிடப்பட்ட பழங்குடியினரில் ஒருவரும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் 7 பேரும் உள்ளதாக அவர் தனது பதிலில் தெரிவித்தார்.